நினைத்தேன் எழுதுகிறேன்......
ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்வதில் என்ன தவறு?
இன்றைய சூழ் நிலையில் ஒருவர் தன்னை ஹிந்து என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் இது போன்ற கருத்தைச் சொல்வதால் சமூகத்தில் நம்மை வகுப்புவாதி என்று முத்திரைக் குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு பலர் தங்களை நடு நிலை வாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான கோட்பாடு திட்டமிட்ட ரீதியில் பரப்பப் பட்டு வருகிறது.... அது என்ன? தமிழன் என்பதும் ஹிந்து என்பதும் வேறு வேறு... இந்தப் பொய் பிரச்சாரத்திற்கு மயங்கி பல இளைஞர்கள் தமிழனுக்கும் ஹிந்துவிற்கும் சம்பந்தமில்லை. அது தனி தனி என்று நம்ப வைக்கப்படுகிறார்கள்.
முறையே இந்த வாதம் சரியா? என்று யாரும் யோசிப்பதில்லை. மொழிவாரி மா நிலமாக பிரிக்கப் பட்ட பின்பு தான் தமிழ் நாடு என்ற பெயர் நாம் வாழும் மா நிலத்திற்கு வந்தது. அப்படி என்றால் தமிழ் மொழிக்கும் ஹிந்து கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? சில உதாரணங்களைப் பார்ப்போம்........
கொசுறு கலாச்சாரம்......
முன்பெல்லாம் தெருத்தெருவாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்வார்கள். ( இப்போதெல்லாம் பழமுதிர் நிலையங்களும் மால்களும் அந்த இடத்தைப் பிடித்து விட்டன) அப்படி வரும் வியாபாரியிடம் ஒரு கிலோ வெண்டைக்காய் வாங்கினால் ஒரு கிலோவிடன் சேர்த்து கடைசியாக கொஞ்சம் வெண்டைகாயை சேர்த்துக் கொடுப்பார்கள். இதற்கு கொசுறு என்று பெயர்... இந்த தன் நிலை விளக்கத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை.... ஏன் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.....
இப்படி தெருவில் வரும் வியாபாரிகள் அன்போடு ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் அவர்கள் வீட்டில் உள்ளோரைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பர்..... என் வீட்டிற்கு ஒரு கீரை காரம்மா (பெயரே கீரக் காரம்மா தான்....உண்மை பெயர் தெரியாது) கீரை கொண்டு வந்து கொடுப்பர். ஒரு முறை என் அத்தைக்கு வாய் புண் வந்து மிகவும் அவதிப்பட்டார். அடுத்த நாள் அந்த கீரைக்காரம்ம மணத்தக்காளி கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார்..... இதே போல் வாத நாராயணக் கீரை ஒரு நாள் கொண்டு வந்துக் கொடுத்தார் (என் பாட்டியின் வாத நோய்க்காக) பிறிதொருமுறை முடக்கத்தான் கீரை (அம்மவின் மூட்டு வலிக்காக).... இதை இப்போது நினைத்து பார்க்கிறேன்.. இந்த இனம் புரியாத கீரைக்காரியின் அன்பு யார் சொல்லி வந்தது.... இது நம் கலாச்சாரம் சார்ந்த விஷயம் தானே? இந்தப் பழக்கம் அயல் நாட்டில் இருந்தா வந்தது? இது தானே நம் மண்ணின் மரபு.... இப்போதிருக்கும் பழமுதிர் நிலையங்களில் இதைப் போன்ற அன்பை எதிர்பார்க்கத் தான் முடியுமா?
கொசுறு தான் தருவார்களா? பழத்தை எண்ணிக்கையில் வாங்கியது ஒரு காலம்.... இப்போது எடை தான் எல்லாமே.....
இந்த கொசுறு கலாச்சாரம் நம் தமிழ் மண்ணிற்கு மட்டுமே உரித்தானதா? இல்லை.....
ஆந்திராவில், கர்னாடகாவில், மஹாராஷ்ட்ரத்தில், பஞ்சாபிலும் கூட இந்த கொசுறு கலாச்சாரம் இருக்கிறது.....
பாமர மக்களிடையே உள்ள பழக்க வழக்கம் தான் கலாச்சாரம். இது எப்படி நம் நாடு முழுமைக்கும் ஒரே பழக்க வழக்கம் இருக்க முடியும் என்று கேள்வி கேட்பவர் எத்தனை முட்டாளாக இருப்பார்...... அதற்கு ஒரு சான்றே கொசுறு கலாச்சாரம்....
இது போன்ற பல இயற்கையான சான்றுகளை வரும் பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
ராகு