Sunday, September 17, 2017

ரோஹிங்யா முஸ்லீம்

ரோஹிங்யா முஸ்லீம் மக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?


மியான்மரிலிருந்து இது வரை (அரசு கணக்குப் படி 40000 ரோஹிங்யா முஸ்லீம் மக்கள் அகதிகளாக நம் நாட்டிற்கு வத்துள்ளனர். தற்பொழுது இவர்களை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கின்றனர்.. இது சரியா? 

நாடு விடுதலை அடைந்த போது இதே நிலைமைதான் காஷ்மீரத்தில் இருந்தது. காஷ்மீரத்தில் தனி நாடு கேட்டு காஷ்மீர் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த தீவிரவாதிகளுக்கு, நாம் முஸ்லீம் மக்களுக்கென்றெ பிரத்யேகமாக பிரித்து கொடுத்த தனி நாடான பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து புகலிடம் தந்தது. இன்றும் அதற்கான விலையை(மும்பை தாக்குதல், காஷ்மீரில் பல இடங்களில் குண்டு வெடிப்பு, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள நம் காஷ்மீரத்தின் நிலப் பகுதி, காஷ்மீர் ஹிந்து பண்டிட்டுகள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்க்கை நடத்தும் கொடுமை.. இன்னும் பல)   கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்…. நாம் எப்படி பாகிஸ்தானை ஒரு பகை நாடாக பார்க்கிறோமோ அதே போல் மியன்மரும் நம்மை பகை நாடாக பார்க்க நாம் ஒரு சந்தர்ப்பத்தை ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு புகலிடம் கொடுப்பதால் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறோமா?

இரண்டாவது… இது மியான்மரின் உள் நாட்டு பிரச்னை.. நம் நாட்டில் ஆயிரம் பிரச்னை இருக்கும் போது புதியதாக  இன்னொரு பிரச்னை ஒன்று தேவையா?

மூன்றாவது…. மனிதாபினாம் அடிப்படையில் புகலிடம் கொடுப்பது தானே தர்மம். ஏன் அதை எதிர்க்க வேண்டும்? நல்ல கேள்வி… இன்று 40000 பேர்களாக இருக்கும்(2017 மார்ச் கணக்கின் படி) ரோஹிங்யா முஸ்லீம்கள் இன்னும் 20 ஆண்டுகளில் கணிசமான மக்கள் தொகையாக பெருக்கம் அடையும். அப்போது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஒரு தீராத தலைவலியாக இந்த பிரச்னை உருவெடுக்கும்… நம் வருங்கால சந்ததிகளின் அமைதியைக் கருத்தில் கொண்டு இவர்களை நம் நாட்டில் அனுமதிக்காமல் இருப்பதே நம் அனைவருக்கும் நலம்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளான பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா ஆகிய எந்த நாடும் ரொஹிங்யா முஸ்லீம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏன்? அனைவரும் இஸ்லாமியர்கள் தானே?

பிரச்னை என்ன? ஏன் இவர்கள் இந்த நிலையை எடுக்கிறார்கள்? புகலிடம் கொடுப்பது அனாவசியமானது என்று இந்த நாட்டின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் இதைக் கண்டிக்கவும் இல்லை. ஏன் என்றும் இது வரை கேட்கவில்லை ஐ நா சபையைத் தவிர……

ஆனால் நம் நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவு தந்து புகலிடம் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. இங்கு இருக்கும் எதிர் கட்சிகள் ஓட்டு அரசியலுக்காக ஆதார் அடையாள அட்டை முதல் வாக்காளர் அடையாள அட்டை வரை ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தவறான நோக்கத்தோடு வழங்க உதவி செய்கிறார்கள். இது தேச துரோகம் அல்லவா? ஏற்கனவே மதத்தின் பெயரால் நம் நாட்டின் இரண்டு பெரு நிலப்பரப்புகளை இழந்தோம் - பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்…. இன்னும் நம் நாடு மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வேண்டுமா? இந்த் இருக்கும் இஸ்லாமியர்கள் ரோஹிங்யா முஸ்லீம்கள் பற்றி மத ரீதியாக கவலைப் படுவார்களேயானால் ஏன் இவர்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைக் கேட்க மறுக்கிறார்கள்? சிந்தியுங்கள்….


No comments:

Post a Comment