புதுசா மழை பெஞ்சா அதென்னா செடி கொடி எல்லாம் ஜம்முன்னு வரது?
காத்தில 78% நைட்ரஜன் இருக்கு என்கிறது தெரிஞ்சதுதானே? மழை பெய்யறப்ப அது இந்த நைட்ரஜனையும் கூட சேர்த்துக்கொண்டு யூரிக் ஆசிடை உருவாக்கறது. இது இயறகையா வர யூரிக் ஆசிட். அது இலைகளின் மேலே ஒரு ஸ்ப்ரே அடிச்ச மாதிரி தங்கிடுது. இதை உறிஞ்சி செடி ஊக்கம் பெறும். உடனே பச்சையம் (க்லோரோபில்) அதிகமாகும்.செடி கொடி எல்லாம் பச்சைப்பசேல்ன்னு இருக்கும். இதுதான் அட்மாஸ்பியர் செடி களுக்கு செய்யறது.
பின்னே யூரியா போடறதை தப்புன்னு சொல்றீங்க?
ஆமாம். கடையில விக்கிற யூரியால 40% தான் யூரியா மீதி என்னடான்னு கேட்டுப்பாருங்க? எவனும் வாயை திறக்க மாட்டேங்கறான். பில்லர் என்கிறாங்க. சரி, அந்த பில்லர் என்ன, அது செடி கொடுகளுக்கு நல்லதான்னு கேட்டா பதில் வராது.
இந்த யூரியா மார்கெட்டுக்கு வந்த கதையே பலருக்கும் தெரியாது.
இரண்டாம் உலகப்போர் அப்ப ஹிட்லர் அமேரிக்கா செஞ்சுகிட்டு இருந்த ஹைட்ரஜன் பாம் க்கு எதிரா ஆயுதம் தயாரிக்க உத்தரவு போட்டான். ஜெர்மன் விஞ்ஞானிகள் எல்லாம் சேந்து ஆராய்ச்சி செஞ்சு ’நைட்ரஜன் பாம்’ செய்ய திட்டம் போட்டாங்க. அதுக்கு நிறைய லிகர் ஆஃப் அம்மோனியா( அம்மோனியம் ஹைட்ராக்ஸைட்) தேவையா இருந்தது. அதை தயாரிக்க நிறையவே மின்சாரமும் தேவைப்பட்டது. அதனால நதிக்கரையோரம் இருந்த பல மின் நிலையங்கள் பக்க்த்தில இதுக்காக பாக்டரி அமைச்சாங்க. ஏராளமான அளவு தயாரும் ஆச்சு. ஆனா அந்த சமயத்தில உலகப்போர் முடிவுக்கு வந்துடுத்து. ஜெர்மனியை ரஷ்யாவும் மத்த நாடுகளும் பங்கு போட்டுக்கொண்டன. ஸ்டாக் எடுத்தப்ப இந்த மாதிரி நிறைய அம்மோனியம் ஹைட்ராக்ஸைட் இருக்கறது தெரிஞ்சது. இதை என்ன செய்யறது?
யூரியாவா தயார் செஞ்சு உரமா விக்க முடிவு பண்ணாங்க. இந்த நேரத்தில ஐரோப்பியர்கள் இந்தியர்களை பாத்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. அதை மாத்த முடியலை. சரி இதை எப்படியாவது மூணாவது உலக நாடுகள்ல ‘டம்ப்’ செஞ்சுடுவோம்ன்னு முடிவு பண்ணி ஆப்பிரிக்கா இந்தியாவில எப்படியாவது தலையில கட்ட நினைச்சாங்க. இதுக்கு அப்ப இருந்த ப்ரிட்டிஷ் அரசு அரசுத்துறை மூலமாவே ப்ரமோட் பண்ணாங்க. ரகசியமா ராத்திரியோட ராத்திரியா ஒரு வயல்ல யூரியாவை போட்டு அடுத்த வயல்ல போடாம வ்ட்டுடுவாங்க. ரெண்டு வாரம் கழிச்சுப்பாத்தா யூரியா போட்ட வயல்ல இருந்த பயிர் எல்லாம் பச்சைப்பசேல்ன்னு ஆயிருக்கும். அடுத்த வயல்ல சாதாரணமா இருக்கும். விவசாயி இதென்னடான்னு குழம்பி இருக்கறப்ப இவங்க போய் தோ பார், இதுக்கு மருந்து போட்டா சரியாயிடும். தொரை வெச்சு இருக்கான் போய் வணக்கம் பண்ணி வாங்கிக்கன்னு அனுப்புவான். இப்படியாக யூரியா விறபனை ஆச்சு. ரசாயன் உரம் வந்ததும் விவசாயிக்கும் நிலத்துக்கும் இருக்கிற தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா அறுந்து போக ஆரம்பிச்சது. இதான் யூரியாவின் கதை.