Sunday, May 31, 2015

ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் - 9001:2008 - ஒரு கண்ணோட்டம்

ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச் சான்றிதழ்

தரத்திற்கான சர்வ தேச சான்றிதழ் என்பது 9001:2008 என்று அழைக்கப்படுகிறது. இதில் தரத்திற்கான பல்வேறு தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் தரமான பொருளையே வாங்க விரும்புகின்றனர். தரம் என்பது ஒவ்வொரு பொருளின் குணத்தில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதில் பொருள் மட்டுமல்ல சேவையும் சேர்ந்து விடுகிறது. ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்கிறோம். அங்கு தரமான உணவு கிடைத்தால் மட்டும் நாம் திருப்தி அடைவதில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நம்மை பணிவோடு உபசரித்து நமக்குத் தேவையான உணவை கனிவோடு பரிமாறுகிறார்களா? என்றும் நாம் பார்க்கிறோம். இதைத் தான் சர்வதேச ஐ.எஸ்.ஓ நிறுவனம் “சேவை” என்று அழைக்கிறது.

வாடிக்கையாளரின் தேவையை அறிந்து ஒரு பொருளையோ அல்லது சேவையை தரமாக அளிப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். 

No comments:

Post a Comment